maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
 திருப்பாடல்கள்

1. " திருப்பாடல்கள்" என்னும்
நூலில் உள்ள மொத்தத் திருப்பாடல்கள் எத்தனை?
      150.

2. " திருப்பாடல்கள்" என்றால் என்ன?
      இஸ்ராயேல்  மக்கள்  தங்கள்  வழிபாட்டில்  பயன்படுத்திய  பக்திப்
      பாடல்கள்,  இசை   மன்றாட்டுக்கள்   ஆகியவற்றன் தொகுப்பு.

3. திருப்பாடல்களை எழுதியவர் யார்?
    தாவீது அரசர் எழுதியதாகக் கருதப்படுகிறது.

4. மெசியாவைப்பற்றி இரண்டாவது திருப்பாடலில் வாசிப்பது என்ன?
    " நீர் என் மைந்தர், இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" (2:7)

5. பாவமன்னிப்பைப் பற்றி திருப்பாடல் எண் 32 கூறுவது என்ன?
   " எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர்
     பேறு  பெற்றவர்" (31;1)

6. எளியோர் மேல் அக்கறை காட்டுவோரை ஆண்டவர் எவ்வாறு கைமாறு 
     அளிக்கிறார் என  திருப்பாடல் எண் 41 கூறுகிறது?

     துன்பநாளில் அவரை விடுவிப்பார். (41:1)

7. தாவீது தன்னுடைய குற்றத்தை உணர்ந்து பாடுவதை திருப்பாடல் எண் 51
    எவ்வாறு  சித்தரிக்கிறது?

      " கடவுளே, உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும், உமது அளவற்ற
      இரக்கத்திற்கேற்ப என்  குற்றங்களை துடைத்தருளும். ஏன் தீவினை முற்றிலும்
      நீங்கும்படி, என்னைக் கழுவியருளும்.  என் பாவம் அற்றுப்போகும்படி,
      என்னைத் துர்ய்மைப்படுத்தியருளும்" (51:1-2)

8. தாவீது கடவுள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை திருப்பாடல் எண் 62 எப்படிக்
     காட்டுகிறது?

     " எனக்கு மீட்புக் கிடைப்பது அவரிடமிருந்தே, உண்மையாகவே என்
      கற்பாறையும் மீட்பும் அவரே, என் கோட்டையும் அவரே, எனவே நான் சிறிதும்
      அசைவுறேன்" (62:1-2)

9. திருப்பாடல் 103ல் தாவீது ஆண்டவரின் அன்பை எவ்வாறு பாடுகிறார்?
    " என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என்முழு உளமே! அவரது திருப்பெயரை
      ஏற்றிடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!அவருடைய கனிவான
      செயல்கள் அனைத்தையும்  மறவாதே!" (103:1-2)

10. திருப்பாடல் 110, மெசியா எவ்வாறு குரு என்றும், அரசர் கூறுகிறது?
     " மெலகிசேதேக்கின் முறைப்படி, நீர் என்றென்றும் குருவே" (110:1)

11. திருப்பாடல் 133, சகோதர அன்பைப் பற்றி எவ்வாறு விபரிக்கிறது?
      " சகோதரா; ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று,எத்துணை இனியது!"
       (133:1)

12. மிகப்பெரிய திருப்பாடல் எண் எது?
      திருப்பாடல் 119. இதில் 176 வசனங்கள் உள்ளன.

13. மிகக் குறுகிய திருப்பாடல் எது?
       திருப்பாடல் 117. இதில் 2 வசனங்கள் உள்ளன.

14. திருப்பாடல் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
      5 பிரிவுகளாக.
Free Blog Widget
Stats Counter
hit counter