maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
நீதிமொழிகள்

1. "நீதிமொழிகள்" என்னும் நூலின் உள்ளடக்கம் என்ன?

     இந்நூல் ஒழுக்கத்தையும், சமயத்தையும் சார்ந்த போதனைகளின்
     தொகுப்பாகும். இவை சாலமோனின் நீதிமொழிகள். (1:1)


2. சாலமோனின் முதல் நீதி மொழி என்ன?
    ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்,
   ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர். (1:7)


3. தாய் தன் பிள்ளைக்கு கற்பிக்கும் ஞானத்தைப் பற்றி சாலமோன்
    கூறுவது என்ன?

   "உன்தாய் கற்பிப்பதைத் தள்ளி விடாதே. (1:8)

4. சோம்பேறிகளைப் பற்றி சாலமோன் கூறுவது என்ன?
    "சோம்பேறிகளே எறும்பைப் பாருங்கள், அதன் செயல்களைக்
     கவனித்து, ஞானமுள்ளவராகுங்கள். (6:6)


5. கடவுளுக்கு வெறுப்பானவை ஏழு, அவையாவை?
    1) இறுமாப்புள்ள பார்வை
    2) பொய்யுரைக்கும் நாவு
    3) குற்றமில்லாரைக் கொல்லும் கை
    4) சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம்
    5) தீங்கிழைக்க விரைந்தோடும் கால்
    6) பொய்யுரைக்கும் போலிச் சான்று
    7) நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் (6:16-19)


6. சாலமோனின் நீதி மொழிகளைக் கூறுக:

    - "தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது: நேர்மையான 
        நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்" (10:2)
    - "மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்: இன்சொல் 
       அவர்களை மகிழ்விக்கும்" (12:25)
    - "சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே: 
        சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலை ஆகும்"
        (15:19)
     - "பிறர் குற்றங்களை கிண்டிக் கிளறித் துர்ற்றுபவர் கயவர்: 
        எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு" (16:27)
Free Blog Widget
Stats Counter
hit counter