maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
எசாயா  
1. இறைவாக்கு உரைக்க கடவுள் எசாயாவை எப்போது
    தேர்ந்தெடுத்தார்?

    கி.மு. 740ல்

2. எசாயா அனுப்பப்பட்டதன் நோக்கம் என்ன?
    இஸ்ராயேல் மற்றும் யூதாவின் வீழ்ச்சியை முன்னறிவிக்க.

3. எசாயா மக்களிடம் கூறியது என்ன?
    பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்: அவர்களோ எனக்கெதிராக
    கிளர்ந்தெழுந்தார்கள். (1:2)

4. எசாயா மக்களைப் பார்த்து செய்யச் சொன்னது என்ன?
   "தீமை செய்தலை விட்டொழியுங்கள்,
    நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்,
    நீதியை நாடித் தேடுங்கள்,
    ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்,
    திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்,
    கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்". (1:16-17)

5. ஆண்டவர்முன் சேராபீன்கள் பாடிய பாடல் என்ன?
     படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர், மண்ணுலகம் 
     முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது. (6:3)

6. ஆகாசுக்கு ஆண்டவர் அளித்த அடையாளம் என்ன?

     இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண், ஓர் ஆண்மகவைப் 
     பெற்றெடுப்பார், அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று
     பெயரிடுவார்.(7:14)

7. மேற்கூறிய வார்தைகள் யாரைக் குறிக்கிறது?
    மரியாவையும், அவர் மகன் இயேசுவையும்.

8. வரவிருக்கும் இயேசுவைப்பற்றி எசாயா முன்னறிவித்தது என்ன?
    ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஒரு ஆண்மகவு நமக்கு
    தரப்பட்டுள்ளார், ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேலிருக்கும்: அவர்
    திருப்பெயரோ  "வியத்தகு ஆலோசகர்" "வலிமை மிகு இறைவன்",
    "என்றுமுள்ள தந்தை", "அமைதியின் அரசர்" என்று
     அழைக்கப்படும். (9:6)

9. திருமுழுக்கு யோவானைப்பற்றி எசாயாவின் இறைவாக்கு என்ன?
    குரலொலி ஒன்று முழங்குகிறது: பாலை நிலத்தில் 
    ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ் நிலத்தில் நம்  
     கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றை சீராக்குங்கள்,
     பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், மலைக்குன்று யாவும்
     தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும்: கரடுமுரடானது
     சமதளமாக்கப்படும், ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்"
     (40:3-5)

10. எசாயா இறைவாக்கினர் மெசியாவின் காலத்தைதைப்பற்றி
      அறிவித்தது என்ன?

      "ஆண்டவராகிய என்தலைவரின் ஆவி, என்மேல் உள்ளது:
       ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்: 
       ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம்
       உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு
       விடுதலை பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடியலைத் 
       தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் 
        என்னை அனுப்பியுள்ளார்" . (61:1-2)

11. ஆண்டவரின் கடைசித் தீர்ப்புப் பற்றி எசாயா அறிவிப்பது என்ன?
      "அவர்கள் செயல்களையும், எண்ணங்களையும் நான் அறிவேன்: 
        பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச்
        சேர்க்க வருவேன்; அவர்களும் கூடி வந்து என்மாட்சியைக்
        காண்பார்கள்" (66:18)


 
Free Blog Widget
Stats Counter
hit counter