maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
புலம்பல்

1) இந்நூலின் உள்ளடக்கம் என்ன?
    கி.மு. 586ல் ஜெருசலேமுக்கு ஏற்பட்ட பேரழிவையும், அதன் தொடர்
    நிகழ்ச்சியான நாடுகடத்தப்படுதலையும், பற்றி புலம்பலாக இந்நூல்
   அமைந்துள்ளது.
 
2) இந்நூலாசிரியர் யார்?
    எரேமியா இந்நூலை எழுதினார் என்பது மரபுவழிச் செய்தி.

3) இந்நூலில் எத்தனை புலம்பல்கள் உள்ளன?
    ஐந்து.

4) முதல் புலம்பலின்படி எருசலேம் தண்டிக்கப்பட்டது ஏன்?

    "ஆண்டவரோ நீதியுள்ளவர்: நான் அவரது வாக்கிற்கு எதிராக் 
     கிளர்ச்சி செய்தேன்" (1:8). முதல் புலம்பல் (அதிகாரம் 1)
      எருசலேம் அழிவுற்ற நிலையில் தன் துயரங்களை எடுத்துக் கூறி,
      ஒரு "கைம்பெண்" போல ஒப்பாரி வைக்கிறது.

5) இரண்டாம் புலம்பலில் கூறுவது என்ன? (அதிகாரம் 2)
     எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவுக்குக் காரணம் மக்களின் பாவமே  
     என்றும், அதனால் கடவுள் தண்டனை அளித்தார் எனவும்
    அமைந்துள்ளது.

6) மூன்றாம் புலம்பலில் கூறுவது என்ன? (அதிகாரம் 3)
     கடவுளால் தேர்ந்துகொண்ட மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் 
     என்னும் கருத்து வெளிப்படுகிறது. கடவுள் அனுப்பும் துன்பங்கள் 
     மக்களைக் கண்டித்துத் திருத்தி அவர்களை நல்வழிக்குக்
     கொணரவே என்னும் கருத்து துலங்குகிறது.

7) நான்காம் புலம்பலில் கூறுவது என்ன? (அதிகாரம் 4)
     மக்கள் செய்த பாவத்தின் விளைவாக எருசலேம் நகரும்
     திருக்கோவிலும் அழிந்துபட்டன என்னும் கருத்து
     எடுத்துரைக்கப்படுகிறது.

8) ஐந்தாம் புலம்பலில் கூறுவது என்ன? (அதிகாரம் 5)
    மக்கள் மனம் திரும்பி கடவுளை நாடிச்சென்று மன்னிப்பு
    அடையும்படியாக வேண்டல்.

9) ஐந்தாம் புலம்பலில் வரும் ஜெபம் என்ன?
   "ஆண்டவரே! எம்மை உம்பால் திருப்பியருளும்! நாங்கள் உம்மிடம்
    திரும்புவோம்! முற்காலத்தே இருந்ததுபோல, எம் நாட்களை 
    புதுப்பித்தருளும்!" (5:21)

 
Free Blog Widget
Stats Counter
hit counter