maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
எசேக்கியல்  

1) எசெக்கியேல் என்பவர் யார்?
    
அவர் ஒரு குரு.

 2) எசேக்கியேலைப்பற்றி நுhலில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
    
எசேக்கியேல் என்னும் பெயருக்கு, ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்,
    என்பது பொருள். எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியச்
    சிறையிருப்பின் போதும் இறைவாக்கினர் எசேக்கியேல் வாழ்ந்தார்.
    பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டோருக்கு மட்டுமின்றி, எருசலேமில்
    எஞ்சியிருந்தோருக்கும் அவர் இறைவாக்கு உரைத்தார்.   எசேக்கியேல்
    ஆழ்ந்த இறைப்பற்றும் கற்பனை வளமும் கொண்டிருந்தார்.

 3)  எசெக்கியேல் இறைவாக்கினர் இறைவாக்கு உரைக்கும்போது அவர்
      எங்கே இருந்தார்?
      
பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

 4) எசேக்கியேல் இறைவாக்கினர் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?
    
 கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சுமார் 22 ஆண்டுகள் அவர்
      பணியாற்றினார் (கி.மு. 595-573).


 5)  அவர் இந்நூலை எழுதியதன் நோக்கம் என்ன?
    
  யூதர்களிடையே மனமாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்
      என்பதற்காக.


  6) எசேக்கியேல் இந்நுhலில் வலியூறுத்துவது என்ன?
    
  எழுச்சிமிகு தம் எண்ணங்கள் பலவற்றை அடையாளச் செயல்கள்
      வழியாக விளங்குகிறார். ஒவ்வொருவரும் தம் தீவினைகளுக்குப்
      பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், அவர்தம் நெஞ்சமும் எண்ணமும்
      உள்ளார்ந்த புதுப்பொலிவு பெற வேண்டும் என்றும் எசேக்கியேல்
       வலியுறுத்தினார்; நாடும் புதுப்பொலிவு பெற்று வாழ்ந்திட வேண்டும்
       என அறைகூவல் விடுத்தார்.


 7) நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கடவுள் அளித்த வாக்குறுதி என்ன?
    
 "நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல 
      நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக்
      கொணர்வேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.
      புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து
      கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு,  சதையாலான இதயத்தைப்
      பொருத்துவேன்". (36:24,26)


  8)எசேக்கியேல் 34:11-14ல் கூறுவது என்ன?
    
"தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
      நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்.
      ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச்
      செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன்.
      மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும்
     மீட்டு வருவேன். மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து,
      நாடுகளினின்று கூட்டிச் சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு
       அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும்
       ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும்
       மேய்ப்பேன்.  நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன்.

  9) ஆண்டவரின் ஆற்றல் எசேக்கியேல் மீது இறங்கி உரைத்தது என்ன?
      
"ஆண்டவர் என்னிடம் உரைத்தது:
       நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை.
      "உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்' என்று
       சொல். தலவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு
      கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும்
       உயிர் பெறுவீர்கள். நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்;
       உங்கள் மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால்
       மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும்
        உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என  அறிந்து
        கொள்வீர்கள்." (37:4-6)
Free Blog Widget
Stats Counter
hit counter