maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
யோனா
1) யோனா என்பவர் யார்?
   
அமிதாயின் மகன். (1:1)

2)
  யோனா என்னும் பெயரின் பொருள் என்ன?
    
இப்பெயரின் பொருள் "புறா" என்பதாகும்.

3) ஆண்டவர் யோனாவிடம் கூறியது என்ன?
   
புறப்பட்டு நினிவே  மாநகருக்குச் சென்று, அவர்கள் செய்யும் தீமைகளை
   அறிவிக்குமாறு அனுப்பினார். (1:2)


4) யோனாஸ் செய்தது என்ன?
   
அவர் ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணி நினிவே நகருக்கு  எதிர்த்
    திசையிலிருந்த தார்சீசுக்குப் புறப்பட்டார். (1:3)


5)
கப்பலோட்டிகள் யோனாவை கடலில் தூக்கியெறிந்தது ஏன்?
    கடல் கொந்தளிப்பை தணிப்பதற்காக.(1:15)
  யோப்பா துறைமுகம் சென்று அங்கு ஒரு கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணமானார். கடலில் ஒரு பெருங்காற்று வீசியது. கப்பல் உடைந்து போகும் நிலையில் இருந்தது. இத்தீங்கு ஏற்பட யார் காரணம் என்றறியச் சீட்டுப் போட்டார்கள். யோனாதான் குற்றவாளி என்று தீர்மானித்து, அரைகுறை மனத்தோடு அவரைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்.


6) யோனாவுக்கு நேர்ந்தது என்ன?
   
ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. (1 :17)
    அவர் கடலில் மூழ்கிச் சாகாவண்ணம் கடவுள் ஒரு பெரிய மீன் வந்து  
   யோனாவை விழுங்கிட ஏற்பாடு செய்கிறார்.


7) யோனா மீன் வயிற்றில் எத்தனை நாள் இருந்தார் ?
   
மூன்று நாள் அல்லும் பகலும் மீன் வயிற்றில் இருந்தார். (1 :17)

8) நினிவே மக்களுக்கு யோனாஸ் கூறியது என்ன?
  
  "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்" என்றார்.(3:4)

9) நினிவே  மாநகரம் அழிக்கப்படாமல் விட்டதன் காரணம் என்ன?
  
யோனா வழியாகக் கடவுள் அளித்த செய்தியைக் கேட்ட நினிவே மக்கள்
   எல்லாரும் மனம் மாறி நோன்பு இருந்தார்கள். அவர்கள் தீய வழிகளினின்று
   விலகியதைக் கண்ட கடவுள் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு
   அவர்களைத் தண்டிக்கவில்லை.
Free Blog Widget
Stats Counter
hit counter