maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
செப்பனியா
1) செப்பனியா என்பவர் யார்?
    கூசியின் மைந்தரும் இறைவாக்கினரும். (1:1)

2) செப்பனியா என்னும் பெயருக்கு அர்த்தம் என்ன?
   
இப்பெயருக்குக் "கடவுள் காக்கிறார்" என்று பொருள்.

3)  செப்பனியா இறைவாக்கு உரைத்த காலம் எது?
   
  கி.மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செப்பனியா இறைவாக்கு
     உரைத்தார்.


4)   இந்நூலில் உள்ள மூன்று அதிகாரங்களும் எவ்வாறு அமைந்துள்ளன?
     
அதிகாரம் 1: ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் அழிவைக் கொணரும்
      நாளாக வரும். ஆண்டவரின் சினம் அந்நாளில் வெளிப்படும்.
      அதிகாரம் 2: அழிவிலிருந்து தப்ப வேண்டும் என்றால் மக்கள் மனம்
      மாற வேண்டும்; அழிவு விவரிக்கப்படுகிறது.
      அதிகாரம் 3: எருசலேம் செய்த தவற்றுக்காகக் கண்டிக்கப்படுகிறது;
      ஆயினும் கடவுளின் இரக்கம் வெளிப்படும். அவர் தமக்குப்
      பிரமாணிக்கமாக இருந்தோருக்கு அமைதியும் மகிழ்வும் நல்குவார்
.

5) ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் பற்றி இறைவாக்கினர் எவ்வாறு
     வர்ணிக்கிறார்?
    
"ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது;
      அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது;
      ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்;
      மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும்.
      அந்த நாள் கடும் சினத்தின் நாள்;
      துன்பமும் துயரமும் நிறைந்த நாள்;
      பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்;
      இருட்டும் காரிருளும் கவிந்த நாள்;
      அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும்
      எதிராக எக்காளமும் போர்முழக்கமும் கேட்கும் நாள்." (1:15-16)


6) நாடு கடத்தப்பட்டு திரும்புதலை இறைவாக்கினர் எவ்வாறு 
    விபரிக்கிறார்?
   
அக்காலத்தில் உங்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து உங்கள் 
    தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்; ஆம், உங்கள் கண்முன்பாகவே 
    உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி, உலகின் எல்லா
    மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன்"
    என்கிறார் ஆண்டவர்.  (3:20)

 
Free Blog Widget
Stats Counter
hit counter