maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
மலாக்கி

மலாக்கி என்னும் பெயருக்கு பொருள் என்ன?.
மலாக்கி என்னும் பெயருக்கு "கடவுளின் தூதுவன்" என்று பொருள்.

இந்நூல் எப்போது எழுதப்பட்டது?

கி.மு. 445 ல் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இந்நூல் தரும் செய்தி என்ன?.
ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்பதே இந்நூலின் செய்தியாகும்.
மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று நாடு திரும்பினர் (கி.மு. 538). அவ்வமயம் அவர்களது வாழ்க்கை நிலை எவ்வாறிருந்தது என்பதையும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது.


மணமுறிவைப்பற்றி கடவுள் கூறுவது என்ன?
தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக. ஏனெனில் "மணமுறிவை நான் வெறுக்கிறேன்". (2:15-16)

தீர்வு  நாளைப்பற்றி ஆண்டவர் கூறுவது என்ன?
இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது முற்றிலும் சுட்டெரித்து விடும்" என்கிறார் படைகளின் ஆண்டவர். (4:1)

ஆண்டவர் யாரை அனுப்புவதாக வாக்களித்தார்
இறைவாக்கினர் எலியாவை. (4:5)

இறைவாக்கினர் எலியா யாரைக்குறித்து பேசினார்?
திருமுழுக்கு யோவான்.
 
Free Blog Widget
Stats Counter
hit counter