maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
தோபித்து
1. தோபித்து என்னும் இந்நூலின் உள்ளடக்கம் என்ன?
     இது உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்து வந்த ஒரு
     மகனின் கதை.  (1:3)

2. இந்நூலின் மையச் செய்தி என்ன?
      பல்வேறு துன்பங்களிடையிலும் தன்மீது பற்றுறுதி கொண்டு
     வாழ்வோர்க்கு கடவுள் கைமாறு அளித்து அவர்களைக் காப்பார்
     என்பதாகும். (முன்னுரை)

3. தோபித்து எக்குலத்தைச் சேர்ந்தவர்?
     நப்தலி குலத்தைச் சேர்ந்தவர். (1:1)

4. தோபித்தின் சொந்த ஊர் எது?
    கலிலேயாவிலுள்ள திசிபே. (1:2)

5. தோபித்துக்கு என்ன ஆனது?
     அவர் அசீரிய நாட்டில் உள்ள நினிவே நகருக்கு நாடு
     கடத்தப்பட்டார். (1:3)

6. தோபித்தின் மனைவி பெயர் என்ன?
     அன்னா. (1:20)

7. தோபித்தின் மகன் பெயர் என்ன?
    தோபியா. (1:9)

8. தோபித்து நினிவே நகரில் செய்து வந்த வேலை என்ன?
    மன்னருக்கு வேண்டியவற்றையெல்லாம் வாங்கித்தரக்கூடிய
    வேலை. (1:13)

9. சனகெரிபு தோபித்து மீது சினம் கொண்டது ஏன்?
    மன்னரால் கொலை செய்யப்பட்ட அனைவரையும் அவர் புதைத்து
    வந்ததால்.  (1:19)

1
0. மன்னனின் சினம் கண்டு தோபித்து செய்தது என்ன?
     அவருக்கு அஞ்சி நினிவேயிலிருந்து ஓடி விட்டான். (1:19)

11. அதன்பின் சனகெரிபுக்கு நேர்ந்தது என்ன?
      40 நாட்களுக்குள் சனகெரிபின் மைந்தர்கள் இருவர் அவரைக்
      கொன்றனர். (1:21)

12. தோபித்து பார்வை இழந்தது எவ்வாறு?
        தூங்கும் பொழுது அவர் தலைக்கு மேல் சுவரிலிருந்த
        குருவிகளின் சூடான எச்சம் அவர் கண்களில் விழ உடனே
        கண்களில் வெண்புள்ளிகள் தோன்றின.    (2:10)

13. சாரா என்பவர் யார்?
       எக்பத்தானா நகரில் வாழ்ந்து வந்த இரகுவேலின் மகள். (3:7)

14. சாரா மனம் நொந்து அழக் காரணம் என்ன?
     அவருடைய ஏழு கணவர்களும் இறந்து விட்டதால் அவருடைய
     பணிப்பெண்கள் அவரைப் பழிந்துரைத்தனர். (3:8)

15. கடவுள் தன் வானதூதர் இராபேலை பூமிக்கு அனுப்பியது ஏன்?
     தோபித்து பார்வை பெறவும், சாராவை தோபியாவுக்கு
      மனைவியாக்கவும். (3:17)

16. தம் மகன் தோபியாவுக்கு தோபித்து கொடுத்த அறிவுரை என்ன?
     "உன் தாயை மதித்து நட. அவள் வாழ்நாள் முழுவதும் அவளைக்
      கைவிடாதே"  (4:3)

17. தோபித்து தன் மகன் தோபியாவை எங்கே அனுப்பினார்?
      மேதியா நாட்டு இராகுக்கு அனுப்பினார். (4:20)

18. தோபித்து தன் மகன் தோபியாவை இராகுக்கு அனுப்பியது ஏன்?
      கிபேரிடமிருந்து 400 கிலோ வெள்ளியை பெற்று வருவதற்காக. (5:3)

19. தோபியா தனக்கு வழிகாட்டியாக யாரைக் கூட்டிச் சென்றார்?
       வானதூதர் இராபேல்.(5:17)

20. இராபேல் வானதூதரிடம் அவரது பெயரைக் கேட்டபோது அவர்
      அளித்த பதில் என்ன?

      "நான் உன் உறவினர்களுள் ஒருவரான பெரிய அனனியாவின்      
  
       மகன் அசரியா" (5:13)

21. இவர்கள் எக்பத்தானாவை அடைந்த பிறகு, தோபியா சாராவை
      மணந்தாரா?

      மோசேயின் சட்டத்தின்படி, சாராவை தோபியா தம் மனைவியாக
      திருமண  ஒப்பந்தம் செய்து கொண்டார். (7:13)

22. தனது திருமண இரவன்று, தோபியா பேயின் பிடியிலிருந்து
      எவ்வாறு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்?

        தம் பையிலிருந்த மீனின் ஈரலையும், இதயத்தையும் எடுத்து
       தூபத்திற்கான நெருப்பிலிட்டார். மீனிலிருந்து கிளம்பிய தீய
       நாற்றம் பேயைத் தாக்கவே, அது பறந்து எகிப்திற்கு ஓடியது. (8:2,3)

23. பேய் தப்பித்து ஓடிய பிறகு, தோபியா என்ன செய்தார்?
        தனது மனைவி சாராவோடு எழுந்து நன்று அவர்கள்
        மன்றாடத் தொடங்கினார்கள்.

24. தோபியாவின் மன்றாட்டு என்ன?
      "இப்பொழுது என் உறவினர் இவளை நான் மனைவியாக ஏற்றுக்
       கொள்வது, இச்சையின் பொருட்டன்று, நேர்மையான
      நோக்கத்தோடுதான்.  என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்,
       நாங்கள் இருவரும் முதுமையடையும்வரை இணைபிரியாது வாழச்
       செய்யும் (8:7)

25. தோபியா இரகுவேலுடன் எத்தனை நாட்கள் தங்கியிருந்தார்?
       15 நாட்கள். (9:20)

26. தோபியா வீடு திரும்பும்பொழுது எதினா தோபியாவிடம் கூறியது
      என்ன?

      "ஆண்டவர் திருமுன் என்மகளை உம்மிடம் ஒப்படைக்கின்றேன்.  
       உம் வாழ்நாள் முழுவதும் அவள் கண்கலங்காமல் பார்த்துக்
       கொள்ளும்� (10:13)

27. தோபித்து மீண்டும் பார்வை பெற்றது எவ்வாறு?
      தோபியா, தோபித்து கண்களில் மீனின் பித்தப்பையைத்
      தேய்த்துவிட்டார்.  மீண்டும் அவரது தந்தை பார்வை பெற்றார்.
       (11:11-12)

2
8. அசரியாவுக்கு தோபியா தான் கொண்டுவந்த பொருட்களில்
       பாதியை கொடுக்க வந்தபோது, அசரியா கூறியது என்ன?

       "நான்  இராபேல், ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன்
        பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்" என்றார். (12:15)

29. தோபித்து இறக்கும்போது அவருக்கு வயது என்ன?
      112 வயது. (14:2)

30. தன் பெற்றோர் இறந்தவுடன் தோபியா எங்கே சென்றார்?
      தன் மாமனார் இரகுவேலுடன் வாழ எக்பத்தானுக்கு சென்றார்.
       (14:12)

31. தோபியா இறக்கும்பொழுது அவருக்கு வயது என்ன?

        117 வயது (14:14)

 
Free Blog Widget
Stats Counter
hit counter