maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

சாலமோனின் ஞானம்


1)  பாரூக்கு என்பவர் யார்?
     இவர் நேரியாவின் மகன் (1:1)

2)  இந்நூலின் உள்ளடக்கம் என்ன?
     எருசலேம் நாட்டின் அழிவைப்பற்றி எரேமியா
    முன்னறிவித்ததாகும்.

3)  இஸ்ரயேலர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதற்குரிய
     காரணம்என்ன?

       கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே.
 

4)  பாரூக்கு இஸ்ராயேலுக்கு எவ்வாறு நம்பிக்கை அளித்தார்?

     "நீங்கள் வேற்றினத்தாரிடம் இருக்கப்பட்டது உங்கள் அழிவிற்காக
     அன்று: நீங்கள் கடவுளுக்கு சினமூட்டியதால்தான் பகைவரிடம்
      ஒப்படைக்கப்பட்டீர்கள் (4:5-6)

 
5) இவரின் நூல் வலியுறுத்தும் செய்தி என்ன?
      அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால்
      மனந்திரும்பி,  உண்மை ஞானமாகிய திருச் சட்டத்தைக்
      கடைப்பிடித்து நடந்தால், கடவுள் அவர்களது அடிமைத்தனத்தை
      விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கு மீட்பை
      அருள்வார் என்னும்  செய்தியை இவரின் நூல் வலியுறுத்துகிறது.
 
 
6) யூதர்கள் எருசலேமில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்கள்?

      ஏழு தலைமுறைகளுக்கு.

 




 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter