maraikal
MUM
"
விவிலியத்தை அறிவோம்

இளையோர்


 

 
மத்தேயு


1) மத்தேயு நற்செய்தி எம் மொழியில் எழுதப்பட்டது?
     அரமேய மொழியில் (முன்னுரை)

2) மத்தேயு இந்நூலை யாருக்காக எழுதினார்?
    யூதக் கிறிஸ்தவருக்காக (முன்னுரை)

3) மத்தேயு நற்செய்தியின் சிறப்பு என்ன?
   ஏசு இறைமகன் என்பதை நிரூபிக்க பழையஏற்பாட்டு இறைவாக்குகளை
    பயன்படுத்தியுள்ளார்.

4) இந்நற்செய்தியை மத்தேயு எப்போது எழுதினார்?
    ஏறத்தாழ கி.பி 46ல்

5) ஆபிரகாம் முதல் இயேசுக்கிறீஸ்து வரை உள்ள தலைத் திருமுறைகள்
    எத்தனை?

     42 தலைமுறைகள் (1:2-17)

6) இயேசுவின் முதாதையர் பட்டியலில் 4பெண்களின் பெயர்களை
     மத்தேயு குறிக்கிடக் காரணம் ஏதேனும் உண்டா?

     ஆம் (தாமார், ஈராக்காபு, ரூத்து, தாவீதின் மனைவி உரியா ஆகிய
     நால்வரும் பாவிகளாகவோ அல்லது புறவினத்தார்களாகவோ
     இருந்தார்கள். இது உணர்த்தும் கருத்து என்னவெனில் இயேசுவின்
     மீட்புத் திட்டத்தில்  யூதர்கள் அல்லாதவர்களும் சேர்க்கப்பட்டனர்
     என்பதாகும்.

7) மரியாவின் கணவர் சுசையை (யோசேப்பு) மத்தேயு எவ்வாறு
    வர்னிக்கிறார்?

    நேர்மையாளர். (1:19)

8) கிறீஸ்து இம்மானுவேல் என்பதை முன்னறிவித்த இறைவாக்கினர்
    யார்?

    ஏசாயா இறைவாக்கினர்.

9) இம்மானுவேல் என்பதன் பொருள் என்ன?
    கடவுள் நம்முடன் இருக்கிறார். (1:23)

10) ஏரோது அரசன் அஞசியது ஏன்?
      கீழ்த்திசையிலிருந்து எருசலேமுக்கு வந்த யூதர்கள், யூதர்களின்
      அரசராகப் பிறந்திருக்கிறவரை வணங்க வந்திருக்கிறௌம் என்றதால்.
      (2:2)

11) ஞானிகள் இயேசுவுக்கு காணிக்கையாக அளித்தது என்ன?
       பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப்போளமும் (2:11)

12) குழந்தை இயேசுவையும், அவர் தாய் மரியாவையும் யோசேப்பு எங்கே
      கூட்டிச் சென்றார்?

       எகிப்துக்கு (2:14)

13) அவர்கள் எகிப்தில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்கள்?
       ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தனர். (2:15)

14) யூதேயாவில் ஏரோதுக்குப்பிறகு அரசாண்டது யார்?
      ஆர்க்கேலா (2:22)

15) இயேசுவுக்கு நசரேயன் என்ற பெயர் சுட்டப்பட்டது எப்படி?
      அவர் நசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிருந்ததால்,
      இவ்வாறு அழைக்கப்பட்டார்.(2:23)

16) திருமுழுக்கு யோவான் கொண்டு வந்த உணவு வகை என்ன?
      வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும்.(3:4)

17) இயேசு திருமுழுக்கு பெறும்போது பரிசுத்த ஆவி எவ்வடிவில் அவர்
      மேல் வந்திறங்கினார்?

        புறாவடிவில் (3:16)

18) யோவானின் திருமுழுக்கிற்கும்இ நமது திருமுழுக்கிற்கும் உள்ள
      வேறுபாடு என்ன?

       திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கு திருவருட்சாதனம் இல்லை,
       எனவே அது பாவத்தைப் போக்கவில்லை. நமது திருமுழுக்கு ஓரு
       திருவருட்சாதனம்.

19) பிசாசின் அலகையனால் சோதிக்கப்படுவதற்கு முன்பாக இயேசு
      எத்தனை நாள் நோன்பிருந்தார்?

     40நாள் இரவும் பகலும். (4:2)

20) பேதுறு எனப்படும் சீமோனின் சகோதரார் யார்?
     ஆந்திரேயா. (4:18)

21) பேதுறுவிடமும், ஆந்திரேயாவிடமும் இயேசு கூறியது என்ன?
       "என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனிதரைப்
       பிடிப்பவர்களாகுவேன்" (4:19)

22) செபதேயுவின் புதல்வர்கள் யாவர்?
        யாக்கோபும், அவர் சகோதரரான் யோவானும். (4:21)

23) இயேசு யாக்கோபையும் யோவானையும் அழைக்கும்போது, அவர்கள் 
        எங்கே  இருந்தார்கள்?

       அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன், படகில் வலைகளைப் பழுது
       பார்த்துக் கொண்டிருந்தனர் (4:21)

24) இயேசு மலைப் பொழிவில், ஆற்றிய மறையுரை என்ன?
       யார் யாரெல்லாம் பேறு பெற்றவர்கள் என்பதைப் பற்றி அவர்
      திருவாய் மலர்ந்தார்  (5:1-12)

25) தன் சகோதரரையோ, சகோதரியையோ முட்டாளே அல்லது
     அறிவிலியே என்பவருக்கு வழங்கப்படும் தண்டனை என்ன?

     எரி நரகத்துக்கு ஆளாவர். (5:22)

26) மண்ணுலகின்மேல் ஆணையிடக் கூடாதது ஏன?
       ஏனெனில் அது கடவுளின் கால் மனை. (5:35)

27) எவ்வகையான நிறைவை இயேசு எதிர்பார்க்கிறார்?
      விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல், நீங்களும்
      நிறைவுள்ளவராய்  இருங்கள் என்கிறார் (5:48)

28) கர்த்தர் கற்பித்த 
ஜெபம் காணப்படும் இரு நற்செய்திகளையும்,
     அதிகாரத்தையும்  கூறு?

         மத்: 6ம் அதிகாரம்,  லூக்: 11ம் அதிகாரம்

29) உடலுக்கு விளக்கு என இயேசு எதைக் குறிப்பிடுகின்றார்?
      கண் (6:22)

30) பொன்விதியைக் கூறு?
      பிறர் உங்களுக்கு செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம்
      நீங்களும்  அவர்களுக்குச் செய்யுங்கள். (7:12)

31) "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்று நூற்றுவத்
       தலைவனைப் பார்த்து கூறிய இயேசுவிடம் நூற்றுவர் தலைவன்
      அளித்த மறுமொழி என்ன?

     "ஐயா நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
     ஆனால் ஒருவார்த்தை மட்டும் சொல்லும்;  என்பையன் நலமடைவான்"
     (8:8)

32) இயேசு மத்தேயுவை அழைத்தபோது, அவர் செய்து வந்த தொழில்
      என்ன?

      சுங்கச் சாவடியில் வரி தண்டுவது. (9:9)

33) "உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும், பாவிகளோடும் சேர்ந்து
      உண்பது ஏன்?" என்று கேட்ட பரிசேயர்களுக்கு இயேசு அளித்த பதில்
       என்ன?

         " நோயற்றவர்க்கல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை" (9:12)

34) இயேசுவின் ஆடையைத் தொட்டு குணம் பெற்ற பெண், எத்தனை
      ஆண்டுகள் இரத்தப்  பெருக்கால் வருந்தினாள்?

       12 ஆண்டுகள். (9:20)

35) இயேசுவுக்கு முன்னோடியாக வரவேண்டிய எலியா யார்?
       திருமுழுக்கு யோவான்.(11:15)

36) கப்பர்நாகும் நகரை இயேசு எவ்வாறு சபித்தார்?
       கப்பர்நாகுமே, நீ வானளவு உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்
       வரை தாழ்த்தப்படுவாய். (11:23)

37) மீனின் வயிற்றில் மூன்று நாள் தங்கியிருந்தவர் யார்?
       யோனா இறைவாக்கினர். (12:41)

38) இயேசுவின் பெரும்பாலான் உவமைகள் எங்கு காணப்படுகின்றன?
        மத்13ம் அதிகாரத்தில்.

39) உவமை என்றால் என்ன?
       இது ஒரு நன்னெறி புகட்டும் கதை.

40) இயேசு மொத்தம் எத்தனை உவமைகள் கூறியுள்ளார்?
       70க்கும்மேல்

41) இவ்வுமைகளில் சிலவற்றைக் கூறுக?
         *  விதைப்பவர் உவமை (13)
         *  கடுகு விதை
         *  புளிப்புமாவு உவமைகள் (13)
         *  புதையல் உவமை (13)
         *  காணாமல்போன மகன் உவமை (லூக்:15:11-32)
         *  நல்ல சமாரியர் உவமை: (லூக்:10:30-37)

42) நல்ல சமாரியன் உவமையை பார்க்காமல் கூறு?
"ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது, அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.

43) இவ்வுவமையின் மூலம் இயேசு நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன?
       துக்க நேரத்திற்கு உதவி செய்தவர்கள்தான், நமக்கு அடுத்திருப்பவர்.

44) திருமுழுக்கு யோவானை ஏரோது சிறையில் அடைத்தது ஏன்?
      தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின்
     பொருட்டு யோவான் சிறையில் அடைக்கப்பட்டார். (14:3)

45) சலோமி என்பவர் யார்?
      ஏரோதியாவின் மகள். (14:6)

46) 5 அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பிறகு,
      மீதி எத்தனை   கூடைகள் நிரப்பி எடுத்தனர்?

       12கூடைகள் (14:20)

47) இயேசு இருந்த இடத்திற்கு சென்றடைய கடல் மீது நடந்தவர் யார்?
        பேதுறு.(14:29)

48) இயேசு செய்த சில புதுமைகளைக் கூறு?
        � முடக்கு வாதமுற்றவரை குணப்படுத்துதல் (9:1-8)
         � பார்வையற்றௌர் இருவர் பார்வை பெறுதல் (9:27-31)
         � காற்றையும், கடலையும்: அடக்குதல் (8:23-27)
         � கதரேனர் பகுதியில் பேய்பிடித்த ஒருவரை நலமாக்குதல் (8:28-34)
         � நூற்றுவர் தலைவனின் பையன் குணமடைதல் (8:5-13)

49) இயேசுவைப்பற்றி பேதுறு கூறியது என்ன?
       "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" (10:16)

50) " பேதுறு" என்னும் கிரேக்கச் சொல்லுக்கு பொருள் என்ன?
         " பாறை" என்பது பொருள் (16:18)

51) இயேசு தோற்றம் மாறும்போது அவரோடு இருந்தவர்கள் யாவர்?
      பேதுறு, யாக்கோபு, யோவான். (17:1)

52) தோற்றம் மாறுதல் என்றால் என்ன?
     சிறிது நேரம் தன்னுடைய மூன்று அப்போஸ்தலர்களுக்கு, தன்னையே 
     கடவுளைப் போன்று காட்சியளித்தல்.

53) இயேசு தோற்றம் மாறின அம்மலையில் அவரோடு உரையாடிக்
      கொண்டிருந்தவர்கள் யாவர்?

       மோசேயும், எலியாவும். (17:3)

54) பேய்பிடித்திருந்த சிறுவனை, இயேசுவின் சீடர்களால் குணமாக்க
      முடியாதது ஏன்?

      அவர்களது நம்பிக்கை குறைவுதான் காரணம். (17:20)

55) வரி செலுத்தக் கொடுக்கப்பட்ட பணம் எங்கிருந்து கிடைத்தது?
      மீனின் வாயிலிருந்து (17:27)

56) அடுத்தவரை மன்னித்தலைப்பற்றி கேட்ட பேதுறுவிடம் இயேசு கூறிய
      பதில் என்ன?

      ஏழு முறை மட்டுமல்ல: எழுபது தடரை ஏழுமுறை மன்னிக்க
      வேண்டும்.(18:22)

57) " திராக்மா" என்பது எந்த நாட்டு நாணயம்?
       கிரேக்க நாட்டு வெள்ளி நாணயம். (17:24)

58) " ஸ்பாத்தேர்" என்னும் வெள்ளி நாணயத்தின் மதிப்பென்ன?
        நான்கு திராக்மா பணத்தின் மதிப்புடையது. (17:27)

59) மோசே மணவிலக்கு தர அனுமதித்தது ஏன்?
         
யூதர்கள் கடின உள்ளத்தின் பொருட்டு (19:8)

60) தன் இரு மக்களும் இயேசுவின் அரியணையின் வலப்புறமும்,
      இன்னொருவன் இடப்புறமும் அமர வேண்டுகோள் விடுத்தது யார்?

        செபதேயுவின் மனைவி. (20:20)

61) இயேசு கோவிலை 
தூய்மைப்படுத்திய பிறகு, அவர் எங்கே சென்றார்?
       பிரித்தானியாவுக்கு சென்றார்.(21:17)

62) ஐந்து தாலந்து பெற்றவன் அதை வைத்து என்ன செய்தான்?
       இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டினான்.( 25:20)

63) " ரபி" என்னும் எபிரேயர் சொல்லுக்கு பொருள் என்ன?
         " போதகர். (23:7)

64) ஆண்டவரின் பாஸ்கா திரு விருந்திற்குப் பிறகு, இயேசு எங்கே
      சென்றார்?

       ஓலிவ மலைக்குச் சென்றார்.(26:30)

65) 
யூதாசு இயேசுவை எவ்வாறு காட்டிக் கொடுத்தான்?
      முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தான். (26:49)

66) பேதுறுவும் இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் என்று கூறியது யார்?
       தலைமைக் குருவின் பணிப்பெண் ஒருவர்.(26:69)

67) பேதுறு இயேசுவை எத்தனை முறை மறுதலித்தார்?
      3முறை.. (26:75)

68) இயேசுவைக் காட்டிக் கொடுத்த 
யூதாசு மனம் வருந்தி தலமைக்
      குருக்களிடமும் மூப்பர்களிடமும், முப்பது வெள்ளிக்காசுகளையும்
      திருப்பி கொண்டுவந்து கொடுத்து அவன் கூறியது என்ன?

      " பழிபாவமில்லாதவரைக் காட்டிக் கொடுத்து பாவம் செய்தேன்"
          என்றான். (27:4)

69) " அக்கல்தாமா" என்றால் என்ன?
       இரத்தநிலம். (27:8)

70) பிலாத்தின் மனைவி அவனிடம் அனுப்பி இயேசுவைப்பற்றி கூறியது
       என்ன?

      அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம்" என்றார்.
       (7:19)

71) இயேசுவின் சிலுவையை சுமக்க உதவி செய்தது யார்?
      சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன். (27:32)

72) இயேசு சிலுவையில் அறையுண்ட பொழுது, ஆறுமுதல் ஒன்பது நேர
      மண்நேரம் வரை,  நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று: அந்த  நேரம்
      என்ன?

       நண்பகல் பன்னிரண்டு மணி முதல், பிற்பகல் மூன்று மணிவரை.
       (27:45)

73) " கொல்கொத்தா" என்பதன் பொருள் என்ன?
          " மண்டையோட்டு இடம்" . (27:33)

74) " ஏலி, ஏலி லேமா சபக்தானி" என்பதன் பொருள் என்ன?
     " என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்" . (27:46)

75) இயேசுவின் சிலுவையில் எழுதப்பட்டிருந்தது என்ன?
    " இவன் 
யூதரின் அரசனாகிய யேசு" என்று எழுதப்பட்டிருந்தது. (27:37)

76) நூற்றுவர் தலைவர் இயேசுவைப்பற்றி கூறியது என்ன?
      " இவர் உண்மையாகவே இறைமகன். (27:54)

77) இயேசுவின் உடலை அடக்கம் செய்ய இடம் கொடுத்தவரின் பெயர்
      என்ன?

       அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு (27;57)

78) இயேசுவின் அடக்கச் சடங்கு முடிந்தபின் இரு பெண்களைத் தவிர
      மற்ற அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். 
 அந்த இரு
         பெண்களின் பெயர் என்ன?

      மகதலா மரியாவும், வேறொரு மரியாவும். (27:61)

79) மகதலா மரியாவும், வேறொரு மரியாவும் கல்லறைத் தோட்டத்தில்
     கண்டது என்ன?

      ஆண்டவருடைய 
தூதரைக் கண்டனர். (28:2)

80) கலிலேயா மலையில் இயேசு தன் சீடர்களிடம் கூற்pயது என்ன?
     " நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள், தந்தை,
       மகன், 
தூய ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்" என்றார். "
       29:19)

81) இயேசுவோடு இருந்த சீடர்கள் எத்தனை பேர்? (28:16)
      11 பேர்.
 
Free Blog Widget
Stats Counter
hit counter