maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

 

தெசலோனிக்கர் I   


 
1. பவுல் இத்திருமுகத்தை எப்பொழுது  எழுதினார்?
    கி.பி. 51 ம் ஆண்டில்.

2. இத்திருமுகம் எங்கிருந்து எழுதப்பட்டது?
     கொரிந்து நகரில் இருந்து.

3. இத்திருமுகத்தின் முக்கிய கருத்து என்ன?
    ஆண்டவரின் இறப்பு, உயிர் பெற்றெழுதல் மற்றும் அவரின் இறுதி
    வருகை  ஆகியவையாகும்.

4. பவுல் தெசலோனிக்காவுக்கு யாரை அனுப்பினார்?
    திமோத்தேயுவை அனுப்பினார் (3:2)

5. ஆண்டவர் தெசலோனிக்கரிடமிருந்து எதிர்பார்த்தது என்ன?
    தூய வாழ்வு (4:7)

6. தெசலோனிக்கர்கள் தவிர்க்கவேண்டிய பாவம் எது என பவுல்
     கூறுகிறார்?

     பரத்தைமையை தவிர்க்கவேண்டும். (4:3)

7. தெசலோனிக்கர்கள் பரத்தைமையை தவிர்க்க வேண்டும் என பவுல்
    கூறக் காரணம் என்ன?

     ஏனெனில் பரத்தைமையில் ஈடுபடுவோரை கடவுள் தண்டிக்கிறார்.
     (4:6)

8. கிறிஸ்துவில் மரிப்போருக்கு நேரிடுவது என்ன?
     இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள்
    அவருடன் அழைத்து   வருவார். (4:14)

9. உலக முடிவின்போது நடப்பது என்ன?
    கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க,
   கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி
    வருவார். (4:16)

10. பவுல் கூறும் மார்புக்கவசம் யாவை?
       நம்பிக்கையும், அன்பும். (5:8)

 






 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter