maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

திமொத்தேயு I 1

 

1. பவுல் இத்திருமுகத்தை எவ்விடத்திலிருந்து எழுதினார்?
     உரோமையில் உள்ள சிறையில் இருந்து.

2. பவுல் இத்திருமுகத்தை எழுதியதன் மையக் கருத்து என்ன?
     மன உறுதியுடன் இருத்தலே. தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று
     பகரவும்,  நற்செய்தி மற்றும் பழைய ஏற்பாட்டின் உண்மையான
    போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், போதகர், நற்செய்தியாளர்
     என்னும் முறையில் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவும்
     திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்;
     துன்பங்கள் நடுவிலும் எதிர்ப்புகள் நடுவிலும் முன்மாதிரியாய் 
     வாழ்ந்து காட்டப் பணிக்கிறார். பயனற்ற வீண் விவாதங்களில்
    திமொத்தேயு ஈடுபடலாகாது என அவர் அறிவுறுத்துகிறார்.
    (முன்னுரை)

3. திமோத்தேயுவின் பாட்டி பெயர் என்ன?
    லோயி. (1:5)

4. திமோத்தேயுவின் தாய் பெயர் என்ன?
     யு+னிக்கி. (1:5)

5. திமோத்தேயுவை ஆயராக அபிசேகம் செய்தது யார்?
    பவுல்.

6. ஒனேசிப்பர் என்பவர் யார்?
    பவுலுக்கு எபேசில் தொண்டாற்றியவர், மற்றும்சிறையில் இருந்த
     பவுலை  சந்திக்கச் சென்றவர். (1:16)

7. திமோத்தேயுவுக்கு கொடுக்கப்பட்ட கடமை என்ன?
     வாய்ப்புக்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், இறைவார்த்தையை
     அறிவிப்பது. (4:2)

8. பவுல் தன் வாழ்வைப்பற்றி என்ன கூறினார்?
    அவர் திரும்பிச் செல்லவேண்டிய நேரம் வந்து விட்டது என்றார்.(4:6)

9. உரேமையில் பவுலை விட்டு அகன்று சென்றது யார்?
    தேமா.(4:10)

10. பவுலோடு சிறையில் இருந்தவர் யார்?
     லூக்கா(4:11)

11. பவுல் தன் போதனைக்காக வழக்காடியபோது, அவருக்கு
      பக்கபலமாக  யாரேனும் இருந்தனரா?

      இல்லை. எல்லோரும் அவரை விட்டு அகன்றனர். (4:16)

12. பவுல் திமோத்தேயுவுக்கு கடைசியில் கூறியது என்ன?
      பிரிஸ்கா, அக்கிலா, ஒனேசிப்போர் ஆகியோரின் வீட்டாருக்கு
    வாழ்த்துக் கூறு.  எரஸ்து கொரிந்துவில் இருந்து விட்டார்.
    துரோப்பிம் நோயுற்றிருந்ததால் அவரை மிலேத்துவில் விட்டு
    வந்தேன். குளிர் காலத்திற்குமுன் வர முழு  முயற்சி செய். ஆபூல்,
    பூதன்சு, லீனு, கிளாதியா மற்ற எல்லாச் சகோதரர்களும் 
    சகோதரிகளும் உனக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். ஆண்டவர்
    உன்னோடு இருப்பாராக! இறை அருள் உங்களோடு இருப்பதாக!
   

 

(4:19-22)






 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter