maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

 

தீத்து 


1) பவுல் தீத்துவுக்கு எப்பொழுது எழுதினார்?
     கி.பி 65ல்.

2) பவுல் தீத்துவுக்கு எவ்விடத்தில் இருந்து எழுதினார்?
     மாசிடோனியாவில் இருந்து.

3)  தீத்து என்பவர் யார்?
     இவர் பிற இனத்துக் கிறீஸ்தவர். பவுலின் 3ம் பயணத்தின்போது
      உடன் இருந்தவர்.

4) இத்திருமுகத்தின் உள்ளடக்கம் என்ன?
    கிரேத்துத்தீவில் திருச்சபை வளர்ச்சி குன்றிய சூழ்நிலையில் தீத்து
    சரியான உதவியாளர்களை தேர்ந்தெடுப்பதேயாகும்.

5) கிரேத்துத்தீவில் தீத்துவுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்ன?
    அங்கே மூப்பர்களையும், ஆயர்களையும் நியமிக்கும் பொறுப்பு  
    இவரிடம்  ஒப்படைக்கப்பட்டிருந்தது.

6) பவுல் தீத்துவை கிரேத்துத்தீவில் விட்டுவிட்டுச் சென்றது ஏன்?
     நகர் தோறும் மூப்பர்களை ஏற்படுத்துவதற்காக (1:5)

7) கிரேக்க இறைவாக்கினர்கள் கிரேத்தர்களைப்பற்றி கூறியது என்ன?
    « கிரேத்தர்கள் ஓயா பொய்யர்கள், கொடிய காட்டு மிராண்டிகள்,
      பெருந்தீனிச்சோம்பேறிகள் » என்று கூறினார். (1:12)

8) திக்குக்குவை தீத்துவிடம் பவுல் அனுப்பும்போது அவர் தீத்துவை  
    எங்கே வரச் சொன்னார்?

     நிக்கப்பொலி நகருக்கு அவரிடம் வந்து சேருமாறு கூறினார். (4:12)

 






 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter