maraikal
MUM
"

இளையோர்


 

விவிலியத்தை அறிவோம்

 

பிலமோன் 


1)  பிலமோன் என்பவர் யார்?
    கொலோசை நகரில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவரும்  
    செல்வருமானவர் இவர்.

2) ஒனேசின் என்பவர் யார்?
    பிலமோன் என்பவரிடம் அடிமைத்தொழில் செய்து வந்தவரும், பின்பு
    தன்  தலைவரிடமிருந்து பவுலிடம் சென்றவருமாவார்.

3) இத்திருமுகத்தின் சிறப்பு என்ன?
    புதிய  ஏற்பாட்டுத்  திருமுகங்களில் இது மட்டும் பரிந்துரை
   மடலாக  விளங்குகின்றது.

4) இத்திருமுகம் எடுத்துக்கூறும் உயரிய கருத்து என்ன?
    கிறிஸ்தவ அன்பு, மன்னிப்பு மிகுந்த தாய், தீமை செய்தோரையும்
    அன்புடன் ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும்.

5) உரோமைச் சட்டப்படி தலைவரிடமிருந்து தப்பி ஓடும்
     தொழிலாளிக்கு  கிடைக்கும் தண்டனை என்ன?

     மரண தண்டனை.

6) பவுல் ஒனேசிமுக்காவை பிலமோனிடம் விடுத்த வேண்டுகோள்
    என்ன?

    « இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையைவிட
   மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக
     ஏற்றுக் கொள்ளும் எனக் கேட்டுக் கொண்டார். (1:15)

7) இத்திருமுகம் எத்தனை அதிகாரங்களில் எழுதப்பட்டுள்ளது?
    ஓரே ஒரு அதிகாரத்தில்.

8) மரபுக்கருத்தின்படி இத்திருமுகத்தை பவுல் எப்பொழுது எழுதினார்?
    கி.பி. 51ம் ஆண்டில் உரோசிறையில் இருந்து எழுதினார் என்பது
    மரபுக்கருத்து.

9) பொரும்பான்மையான விவிலிய அறிஞர்களின் கருத்துப்படி
     இக்கடிதம் எங்கிருந்து எழுதப்பட்டது?

     எபேசில் இருந்து.

10) பவுலுக்கு உடன் உழைப்பாளர்களாக இருந்தவர்கள் யாவர்?
       மாற்கு, அரிஸ்தர்க்கு, ஏமா, லூக்கா ஆகியோர்.(1:24)






 

 
 
 Free Blog Widget
Stats Counter
hit counter